புதினங்களின் சங்கமம்

சாராயப் போத்தல் ஒன்றின் விலை 520 ரூபாவால் அதிகரிக்கப்பட்டது!!

இன்று முதல் அமுலாகும் வகையில் 750 மில்லிலீற்றர் மதுபான போத்தல் ஒன்றின் விலை 520 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பியர் போத்தல் ஒன்றின் விலை 30 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பெறுமதி சேர் வரி (வற்) அதிகரிப்பு காரணமாக இவ்வாறு மதுபான போத்தலின் விலை அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.