Vampan memesபுதினங்களின் சங்கமம்

கொழும்பு சாப்பாட்டு கடையில் இடியப்பம் சாப்பிட்டவரின் பெருமூச்சு இதோ !! ( photos)

இரவுச் சாப்பாடு “இடியப்பம்”

ஆச ஆசையாய் கொழும்பு மருதானை “சம்மாந்துறை” ஹோட்டலில் இரவுச்சாப்பாடு சாப்பிடுவோம் என்று போனேன் அங்கு சோறு இருக்கவில்லை இடியப்பம் இருக்கிறதென்றார்கள் பரவாயில்லை 10 இடியப்பமும் கறியும் தாருங்கள் என்றேன். கணக்கு எவ்வளவு என கேட்டேன் 250/= என்றார்கள். சுவார்சியம் என்னவென்றால் இடியப்பத்தை தூக்கிப்பிடித்தால் வானத்திலிருக்கும் அத்தனை நட்சத்திரங்களும் தெரியும், கறியைப்பார்த்தால் மூன்று தேக்கரண்டி பருப்பும்,புளியங்கொட்ட அளவு மூன்று துண்டு மரவள்ளி கிழங்கும் அடங்கிய ஒரு கலவை பொதியும் இருந்தது.

எனது 32 வருட கால கொழும்பு வாழ்க்கையில் இது ஒரு புது அனுபவமாகவிருந்தது. எப்படி எப்படி எல்லாம் சாப்பிட்ட நமக்கு இப்படியெல்லாம் நடக்கிறதா என்று. பெருமூச்சு விட்டுக்கொண்டு ரூமில் அடங்கிவிட்டேன்.
fb Copy