யாழில் இரு பெண்களின் சடலங்கள் மீட்பு!!
யாழ் வட்டுக்கோட்டை சக்கரத்தை பகுதியில் வீடொன்றில் இருந்து வயோதிக பெண்கள் இருவரது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 76 வயது மற்றும் 73 வயதான இரு பெண்களில் ஒருவர் ஒரு கிழமைக்கு முன்னர் இறந்திருக்கலாம் என்றும் மற்றையவர் ஓரிரு நாட்களுக்கு முன் இறந்திருக்கலாம் எனவும் கருதப்படுகின்றது. முதியோர் உதவித்தொகை வாங்க வரவில்லை என அறிந்த கிராமசேவகர் அவ்வீட்டுக்குச் சென்ற போதே இருவரும் சடலங்களாக காணப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக போலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள்.
