ஒரே குடும்பத்தைச் சேர்ந்த
?பத்மநாதன் விஸ்வநாதன் 29 வயது
?பத்மநாதன் விஜித் 27 வயது
?பத்மநாதன் விழித்திரன் 25 வயது
ஆகியோர் நேற்றைய தினம் நண்பர்களுடன் செம்மலை கடலில் நீராடச் சென்ற போது கடலலையில் காவுகொள்ளப்பட்ட நிலையில், இன்று காலை 7.30 மணியளவில் மூன்றாவது சகோதரனின் உடலமானது நாயாற்றுக்கு நேர் மேலேயுள்ள கடலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. ஏனைய இருவரது உடலத்தையும் தேடும் பணியினை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகிறோம்.




