புதினங்களின் சங்கமம்

ஒன்றரை கிலோகிராம் தங்கத்துடன் பிரான்ஸிலிருந்து யாழ்ப்பாணம் வந்தவர் கைது!

வரியின்றி நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 1 கிலோ 430 கிராம் தங்கத்துடன் சந்தேகநபர் ஒருவர் விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்திற்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் தங்கச் சங்கிலி, பென்டன் மற்றும் வளையல் ஆகியவற்றுடன் பிரான்ஸில் இருந்து இலங்கைக்கு வந்துள்ளார்.

39 வயதுடைய சந்தேகநபர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்.

விமான நிலைய பொலிஸார் மற்றும் இலங்கை சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்