புதினங்களின் சங்கமம்

யாழிலிருந்து முல்லை சென்ற அரச பேருந்து மீது கல் வீச்சுத் தாக்குதல்!

யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவுக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற அரச பேருந்து மீது அடையாளம் தெரியாதோரால் கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் கிளிநொச்சி மாவட்டம் புளியம்பொக்கணைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இன்று இரவு 8.30 மணியளவில் இடம்பெற்ற குறித்த தாக்குதல் சம்பவத்தினால் பேருந்தின் பின் பகுதி கண்ணாடி முற்றாக உடைந்து சேதமாகியுள்ளது.

பயணிகள் சிலர் சிறிய காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.