யாழில் சர்வதேச விமானநிலையம் திறந்த வைக்கப்பட்ட காட்சிகள்!! (video)
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.
இன்று (ஒக்.17) வியாழக்கிழமை முற்பகல் 10.30 மணியளவில்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இணைந்து திறந்து
வைத்தனர்.
இதன்மூலம் இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமாக யாழ்ப்பாணம் சர்வதேச விமான
நிலையம் இடம்பிடித்தது. கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம், மத்தள சர்வதேச விமான
நிலையம் என்பன முதலிரண்டு இடங்களில் உள்ளன.
திறப்பு விழா நிகழ்வில் அரசு தரப்பினர், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டு
இராஜதந்திரிகள், அதிகாரிகள், முப்படையினர், பொது மக்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கு, முதலாவது விமான சேவையாக சென்னை விமான
நிலையத்தில் இருந்து அலையன்ஸ் எயர் வந்து தரையிறங்கியது.
எயர் இந்தியாவின் துணை நிறுவனமான, அலையன்ஸ் எயர் நிறுவனத்தின் ATR 72-600 விமானமே
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் முதலாவதாகத் தரையிறங்கியது.
இந்த விமானம் தரையிறங்கிய போது, நீரைத் தாரை வரவேற்பு அளிக்கப்பட்டது.வரலாறு
இரண்டாம் உலகப் போரின் போது யாழ்ப்பாணம் பலாலியில் விமானத் தளத்தை பிரிட்டன் விமானப் படை
அமைத்தது.
அதன்பின்னர் 1947ஆம் ஆண்டு டிசெம்பர் 10ஆம் திகதி தொடக்கம் கொழும்பு –
இரத்மலானையிலிருந்து புறப்படும் விமானம் பலாலியில் தரையிறங்கி சென்னக்கு பயணத்தைத் தொடரும்.
1976ஆம் ஆண்டு இலங்கை விமானப் படையின் முகாம் பலாலி விமானத் தளத்தில் அமைக்கப்பட்டது.
அதனால் 1982ஆம் ஆண்டு தொடக்கம் விமானப் படைக்கு பலாலி விமானத் தளம் மாற்றப்பட்டது.
1990ஆம் ஆண்டு பலாலி உள்ளிட்ட வலி.வடக்கு பிரதேசம் உயர் பாதுகாப்பு வலயமாகப்
பிரகடனப்படுத்தப்பட்டு மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து 1996ஆம் ஆண்டு லயன் எயர் நிறுவனத்தால் கொழும்புக்கான சிவில் விமான
சேவை ஆரம்பிக்கப்பட்டது.

