புதினங்களின் சங்கமம்

6 வயதுக் குழந்தைக்கு சாராயம் பருக்கிய சிங்களவன்

தனது 6 வயது ஆண் குழந்தைக்கு பலவந்தமாக மது அருந்தச் செய்யப்பட்டுள்ளதாக அம்பலாந்தோட்டை – மொதரவள்ளிய பிரதேசத்தை சேர்ந்த தாயொருவர் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.

அயலிலுள்ள வீடொன்றிற்கு விளையாட சென்ற குழந்தை, வீடு திரும்பிய போது வாயில் இருந்து மது நாற்றம் வீசிய நிலையில் , அது தொடர்பில் குழந்தையிடம் தாய் வினவியுள்ளார்.

இதன்போது , திருமண வைபவம் இடம்பெற்ற வீட்டில் இருந்த நபரொருவர் தனக்கு ஒருவித பானத்தை அருந்தச் செய்ததாக குழந்தை தெரிவித்துள்ளது. இதையடுத்து, தாயார் முறைப்பாடு தெரிவித்துள்ளார்.

அம்பலாந்தோட்டை மருத்துவமனையில் குழந்தை பரிசோதிக்கப்பட்டு, மருத்துவ அறிக்கையை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக அம்பலாந்தோட்டை காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.