பிரான்சிலிருந்து சுவிஸ் சென்ற தம்பிமுத்து சுரேன் கள்ளக்காதலியின் வீட்டில் காயங்களுடன் மீட்பு!! கணவன் கைது!!
யாழ்ப்பாணத்தைச் சொந்த இடமாகக் கொண்டவரும் பிரான்சில் வசிப்பவருமாகிய 48 வயதான தம்பிமுத்து சுரேன் எனும் 2 பிள்ளைகளின் தந்தை சுவிஸ்லாந்தில் வின்ரர்துர் பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து படுகாயங்களுடன் பொலிசாரால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த நபர் அந்த வீட்டில் வசித்து வந்த யாழ் வேலணையைத் சொந்த இடமாகக் கொண்ட 45 வயதான குடும்பப் பெண்ணின் ஆண் நண்பர் எனத் தெரியவருகின்றது. அப் பெண்ணுடன் வீட்டில் நின்ற போது அங்கு வந்த பெண்ணின் கணவனின் சமாரியான தாக்குதலுக்கு முகங் கொடுக்க முடியாது கட்டிலுக்குக் கீழ் பதுங்கியதாகவும் அதன் பின்னர் அங்கேயே மயக்கமடைந்து காணப்பட்டதாவும் தெரியவருகின்றது. சுரேன் இறந்து வி்ட்டார் என கருதிய குடும்பஸ்தர் அங்கிருந்து தலைமறைவான பின் வீட்டுக்கு வந்த குறித்த பெண்ணின 18 வயதான மகளே பொலிசாருக்கு முறையிட்டு பொலிசார் வந்து கட்டிலுக்கு கீழ் மயங்கிக் கிடந்த சுரேனையும் காயங்களுடன் இருந்த குடும்பப் பெண்ணையும் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். தற்போது சுரேனைத் தாக்கிய குறித்த பெண்ணின் கணவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

