புதினங்களின் சங்கமம்

யாழில் தனக்குத் தானே தீவைத்த நபரால் பரபரப்பு!! அதிர்ச்சி (Video)

பருத்தித்துறை மந்திகை அம்மன் கோயில் பகுதியில் ஒருவர் தனக்குத் தானே மண்ணெண்ணெய் ஊற்றி
தீமூட்டியுள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று (13) காலை 08 மணியளவில் நடைபெற்றுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

பருத்தித்துறை கொற்றாவத்தையைச் சேர்ந்த விஜயகாந்த் (வயது -40) என்பவரே இவ்வாறு தனக்குத்
தானே தீமூட்டி உயிரை மாய்க்க முயற்சித்தார்.

“அவர் நேற்றைய தினம் நஞ்சருந்தி தற்கொலைக்கு முயற்சித்த நிலையில் உறவினர்களால் மீட்கப்பட்டு
மந்திகை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். வைத்தியசாலையிலிருந்து இன்று காலை தப்பித்துச்
சென்ற அவர், கடை ஒன்றில் மண்ணெண்ணெய் வாங்கி தனக்குத் தானே தீவைத்துள்ளார்” என்று பொலிஸார்
தெரிவித்தனர்.

சம்பவத்தையடுத்து அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் அம்புலன்ஸுக்கு அறிவித்துவரை அவரை
வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்தனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விவரம் எதிர்பார்க்கப்படுகிறது.

வீடியோவைப் பார்வையிடுவதற்கு முதல் கீழே உள்ள இணைப்பை அழுத்தி இந்த subscribe செய்த பின்னரே குறித்த வீடியோவைப் பார்வையிடுங்கள்.

https://www.youtube.com/channel/UCxugrQ-AB9MY-s18YlwMZZQ?view_as=subscriber