யாழ் உரும்பிராய் சுடலைக்குள் நடந்த சம்பவம் இது!! (Video)
உறவினரின் தகனக்கிரியைக்காக உரும்பராய் இளங்காட்டுச் சுடலைக்கு அண்மையில் சென்றிருந்தேன். பாட்டுக்கார நாராயணன் (75 வயது,அல்வாய்) கடைசியில் 3 கண்ணதாசனின் பாடல்களைப் பாடினார்.சினிமாப் பாடல்களல்லவா இவை? என்று யாரோ கேட்டதற்கு அவர் சொன்ன தத்துவ விளக்கங்கள் அபாரம். கண்ணதாசனையும் அருளாளர்கள் வரிசையில் வைத்துப் பேசினார். அவர் பாடிய அருமையான தத்துவப் பாடல் இதோ..

