முல்லைத்தீவில் 14 வயது சிறுமி தாயின் 2வது கணவனால் பாலியல் துஸ்பிரயோகம்!!
முல்லைத்தீவ புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் பதின் அகவை சிறுமியினை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் தயாரின் இரண்டாவது கணவன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பதின் அகவை சிறுமி வெளிமவாட்டத்தில் விடுதியில் நின்று கல்வி கற்று வந்த நிலையில் விடுமுறையில் வீடு வந்த நிலையில் மனைவியின் இரண்டாவது கணவனால் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய கடந்த 28.02.2022 அன்று 36 அகவையுடைய குடும்பஸ்தர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு பொலீசாரால் கைதுசெய்யப்பட்ட மனைவியின் இரண்டாவது கணவன் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியபோது அவரை எதிர்வரும் 15.03.2022 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது.
