யாழில் 3ஏ எடுப்பாள் என எதிர்பார்த்திருந்த மாணவி சுவிஸ் அங்கிளுடன் ஓட்டம்!! அதிபர் கெஞ்சி மண்டாட்டம்!!
வலிகாமம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் க.பொ.த உயர்தரம் படித்துக் கொண்டிருந்த எதிர்வரும் 7ம் திகதி உயர்தரப்பரீட்சையில் கலந்து கொள்ளவிருந்த 19 வயது மாணவி சுவிஸ்லாந்திலிருந்து வந்திருந்த 36 வயதான குடும்பஸ்தருடன் தலைமறைவாகியுள்ளார். இதனால் பெற்றோர் அதிர்ச்சியடைந்ததிலும் பார்க்க மாணவி கல்வி கற்றுவந்த பாடசாலையின் அதிபர் மற்றும் வகுப்பு ஆசிரியர் ஆகியோர் அதிர்ச்சியடைந்து மாணவியை ஏ.எல் பரீட்சையில் கலந்து கொள்வதற்காக கடும் முயற்சி எடுத்து வருவதாகத் தெரியவருகின்றது.
வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த குறித்த மாணவி வகுப்பில் மட்டுமல்லாது வலயமட்டங்களிலும் நடைபெறும் பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று வருபவர் எனவும் சராசரி புள்ளியாக 90 புள்ளிகளுக்கு மேல் பெற்று வந்துள்ளார் எனவும் இவ்வருட உயர்தரப்பரீட்சையில் தமது பாடசாலையில் சிறப்பு தேர்ச்சி கிடைக்கும் என அதிபர் குறித்த மாணவியையே நம்பியிருந்ததாகவும் தெரியவருகின்றது.
இந் நிலையில் மாணவியின் தூரத்து உறவு முறையான சுவிஸ்லாந்தில் வசித்து வந்த குடும்பஸ்தர் ஒருவர் மாணவியின் குடும்பத்திற்கு உதவிகள் செய்து வந்ததாகத் தெரியவருகின்றது. குறித்த குடும்பஸ்தரின் மனைவி குடும்பஸ்தரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்துள்ள நிலையில் குறித்த குடும்பஸ்தர் அண்மையில் யாழ் வந்து தங்கியிருந்துள்ளார். இதன் பின்னரே மாணவியுடன் தலைமறைவாகினார். மாணவி இவ்வாறு ஒருவருடன் ஓடிவிட்டதை அறிந்த அதிபர் மற்றும் ஆசிரியர் மாணவியின் வீட்டுக்குச் சென்று விசாரித்து பின்னர் க.பொ.த உயர்தரப்பரீட்சையில் மாணவியை பங்குபற்ற வைப்பதற்காக குறித்த குடும்பஸ்தருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக பாடசாலை வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.

