புதினங்களின் சங்கமம்

கிளிநொச்சியில் உழவு இயந்திரம் ஓடிய 6 வயதுச் சிறுவன் துாக்கி வீசப்பட்டு பரிதாப மரணம்!!!

வீட்டில் நிறுத்தி வைக்கப்படிருந்த உழவு இயந்திரத்தைத் திறப்புப் போட்டு இயக்கிய 6 வயதுச்
சிறுவன் விபத்துக்குள்ளாகி உழவு இயந்திரச் சில்லுக்குள் நசியுண்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

உழவு இயந்திரம் மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியதால் சிறுவன் தூக்கி எறியப்பட்டார்
என்று விசாரணைகளின் பின்னர் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் கிளிநொச்சி கோணாவில் மத்தியில் நேற்றுத் திங்கட்கிழமை மாலை 5.30
மணியளவில் இடம்பெற்றது என்று கிளிநொச்சிப் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் சுகிதன் (வயது-6) என்ற சிறுவனே பரிதாபதாக உயிரிழந்தார்.

“வீட்டில் முன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரத்தில் ஏறிய சிறுவன், அதன் திறப்பைப்
போட்டு இயக்கியுள்ளார். அது உருண்டு சென்று மரம் ஒன்றுடன் மோதுண்டு
விபத்துக்குள்ளாகியுள்ளது.

அதனால் தூக்கி எறியப்பட்ட சிறுவன், உழவு இயத்திரச் சில்லுக்குள் நசியுண்டுள்ளார்.
சிறுவனை உடனடியாக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற போதும் அவர் ஏற்கனவே
உயிரழந்துவிட்டார் என்று மருத்துவர் தெரிவித்துள்ளார்” எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சிப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.