புதினங்களின் சங்கமம்

பொய் செய்தியால் குருநாகலில் மீண்டும் பதற்றம்!! பெருமளவு படையினர் குவிக்கப்பட்டனர்!!

குருணாகலில் மக்கள் பதற்ற அடைந்தமையினால் அந்தப் பகுதியில் பெருமளவு படையினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டனர்.தும்மலசூரிய நகரத்தில் தாக்குதல் நடத்தப் போவதாக நேற்று மாலை வெளியாகிய போலியான தகவலினால் அந்தப் பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக இராணுவத்தினர் உட்பட பாதுகாப்பு பிரிவினர் தும்மலசூரிய பிரதேசத்தில் குவிக்கப்பட்டதாக தும்மலசூரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.தும்மலசூரிய நகரத்திற்கு அருகில் கரதாவில பாலத்திற்கு அடியில் 500 வெற்று துப்பாக்கி ரவைகளை இராணுவத்தினர் கண்டுபிடித்தனர்.இதனையடுத்து தாக்குதல் தொடர்பான தகவல்கள் பரவத்தொடங்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.போலியான தகவல் காரணமாக அந்தப் பகுதி மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். இதனால் இராணுவம் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.