கோப்பாய் பிரதேச செயலக ஊழியர்களுக்கு அடி போட ஆயத்தமாகும் கோப்பாய் பெற்றோல் நிலையத்தில் நிற்கும் பொதுமக்கள்!!
யாழ் அரச அதிபர் , பிரதேச்செயலாளர்கள் உட்பட முக்கிய அதிகாரிகளுக்கு வீடுகளுக்கு எரிபொருட்கள் விநியோகிக்கப்படுவதாகவும் இதனால் அவர்கள் சொகுசாக இருந்து கொண்டு மக்கள் எரிபொருளுக்காக படும் துன்பங்களை கருத்தில் எடுப்பதில்லை எனவும் யாழ்ப்பாண பொதுமக்கள் குமுறுகின்றார்கள். கிடைக்கும் எரிபொருட்களை எவ்வாறு பகிர்வது என்ற அடிப்படை அறிவில்லாத முட்டாள் அதிகாரிகளாக இவர்கள் இருப்பதாக பொதுமக்கள் குறை கூறுகின்றார்கள்.
இந் நிலையில் இன்று கோப்பாய் சந்தியில் உள்ள பெற்றோல் நிரப்பு நிலையத்தில் பெற்றோல் விநியோகம் செய்யப்படுவதை அறிந்து ஆயிரக்கணக்கான மக்கள் வரிசையில் காத்துள்ளார்கள். இவ்வாறான நேரத்தில் குறித்த நிரப்பு நிலையத்தில் பெற்றோல் விநியோகம் செய்ய முற்படும் வேளையில் 250 ற்கும் மேற்பட்ட கோப்பாய் பிரதேச உத்தியோகத்தர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பெற்றோல் கொடுக்கப்படவுள்ளாதாக தகவல் பரவியுள்ளாதால் அங்கு பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
குறித்த ஊழியர்களுக்கு பொதுமக்களுக்கு எரிபொருள் விநியோகிக்கும் நேரத்தில் எரிபொருள் வழங்காது இன்னொரு நேரத்தில் எரிபொருளை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

