புதினங்களின் சங்கமம்

யாழ் வடமராட்சியில் ஒரு மாதக் குழந்தை பரிதாபகரமாகப் பலி!!

தாய்ப்பால் புரைக்கேறி ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. ஒரு மாதக் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. யாழ்ப்பாணம் வடமராட்சி கரவெட்டி மேற்கு, பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த அஜந்தன் அக்சயன் என்ற ஒரு மாதமேயான ஆண் குழந்தையே உயிரிழந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

நேற்று (09) அதிகாலை தாய்ப்பால் குடித்த குழந்தை புரைக்கேறிய நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்து, இந்நிலையில் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்களால் தெரிவிக்கப்பட்டது.