புதினங்களின் சங்கமம்மருத்துவச் செய்திகள்

கொரோனா நோய் தொற்று உடல் உறவின் போது விந்தணு எண்ணிக்கையை குறைக்கிறதா? BBC News

கோவிட்-19 தொற்று பாதிப்பு ஏற்பட்ட ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவு, விந்தணுக்களின் தரத்தில் சரிவு ஏற்பட்டதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உண்மையில் அந்த ஆய்வு குறித்து மருத்துவர்கள் தெரிவித்தது என்ன? விந்தணுக்கள அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்? என்ன மாதிரியான உணவுகள எடுத்து கொள்ள வேண்டும்?

விந்தணு குறித்த ஆய்வு முடிவுகள் என்ன?

பெல்ஜியத்துல உள்ள ஆன்ட்வெர்பின் பல்கலைக்கழக மருத்துவமனையின் ஆராய்ச்சியாளர் கில்பர்ட் கிகி டாண்டர்ஸ் தலைமையில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறது.

கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு மீண்டுவந்த 18 முதல் 70 வயதுடைய ஆண்களிடம் இருந்து விந்தணுக்கள் தனித்தனியாக சேகரிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது.

அதில், கோவிட் தொற்று பாதிப்பு ஏற்பட்டு ஒரு மாதம் கூட ஆகாத சூழலில் இருந்த ஆண்களிடம் எடுக்கப்பட்ட விந்தணுக்களில் பெரும்பாலானவர்களுக்கு விந்தணுக்களின் இயங்குதிறன் குறைந்திருந்தது தெரியவந்தது. அதாவது 60 சதவீத ஆண்களிடம் இயங்குதிறன் குறைவாக இருந்தது. அதே சமயம் 37% பேருக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது.

ஆனால் கோவிட் பாதிப்புக்கு பிறகு 2 மாதம் கழித்து சோதனைக்கு வந்த வேறு சில ஆண்களிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் 28% பேருக்கு மட்டுமே இயங்குதிறன் குறைவாக இருந்ததாகவும், 6% பேருக்கு மட்டுமே விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.

இந்த ஆய்வு முடிவுகள் ‘ஜெர்னல் ஆஃப் ஃபெர்டிலிடி அண்ட் ஸ்டெர்லிட்டி’ (Journal of Fertility and Sterility) என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

எவ்வளவு காலம் இப்படியே இந்த பிரச்னை இருக்கும்?

கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விந்தணுக்கள் தரமிழப்பு, எண்ணிக்கை குறைவு போன்ற பிரச்னைகள் இருப்பது தெரியவந்ததாக ஆய்வாளர்கள் கூறினாலும், அதற்கு காரணம் சார்ஸ் கோவிட் 2 வைரஸ் தான் என்பதற்கு முழுமையான தெளிவான தொடர்பு இல்லை என ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.

கோவிட் தொற்று பாதிப்புக்குள்ளானவர்களுக்கு நாட்கள் செல்ல செல்ல விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும், தரமும் கூடும் என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். அதாவது விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க, குறைந்தது மூன்று மாதங்கள் ஆகலாம் என மதிப்பிடுகிறார்கள்.

YouTube பதிவை கடந்து செல்ல, 1

காணொளிக் குறிப்பு எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு, 1

ஆனால், விந்து தரத்தில் ஏற்படுற சரிவு சிலருக்கு நிரந்தரமாகி விடுகிறதா அல்லது விந்தணுக்கள் தரம் மற்றும் எண்ணிக்கை கோவிட் பாதிப்புக்கு முன் எப்படி இருந்ததோ, அப்படி பழைய நிலைக்கு திரும்ப மிகச்சரியாக எவ்வளவு காலம் எடுக்கும் என்பதையெல்லாம் உறுதிப்படுத்த மேலும் ஆய்வுகள் தேவை என தெரிவிக்கின்றனர்.

மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு விந்தணு தரம் குறைவாக இருந்தது கண்டறியப்பட்டாலும் அவர்களுக்கு கொரோனாவுக்கு முன் விந்தணு தரம் எப்படி இருந்தது, எண்ணிக்கை எவ்வளவு இருந்தது என்பது குறித்த விவரங்கள் தங்களிடம் இல்லை என்பதையும் அந்த ஆய்வு தெளிவுபடுத்துது.

மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்?

கொரோனா வைரஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கொரோனா வைரஸ்

விந்தணு எண்ணிக்கை எப்போதுமே மாறக்கூடியது என்று IVF கிளினிக்கின் நிறுவனரும் மருத்துவருமான ராமராஜு தெரிவிக்கின்றார்.

வயதைப் பொறுத்து விந்தணுக்கள் எண்ணிக்கை, தரம் மாறுவது வழக்கமானது. கோவிட் 19 விதைப்பையை எந்த அளவுக்கு பாதித்திருக்கிறது என்பதையெல்லாம் ஆராயாமல் இந்த ஆய்வு குறித்து முடிவெடுப்பது கடினம் என்கிறார் அவர்.

கோபராஜு சமரம் எனும் மற்றொரு மருத்துவர் சாதாரண காய்ச்சலின்போது கூட விந்தணு எண்ணிக்கையில வித்தியாசம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்கிறார்.

கோவிட் 19 காரணமாக முழு உடலும் பாதிக்கப்படுறதாவும், விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவது அந்த பாதிப்புகளில் ஒன்றாக பார்க்க வேண்டும் என்கிறார். எனினும் விந்தணுக்கள் எண்ணிக்கை திடீரென சரியும்பட்சத்தில், மருத்துவர்கள் ஆன்டி ஆக்சிடென்ட்கள், வைட்டமின்-A மற்றும் வைட்டமின்-D போன்ற சத்துக்களை பெற மருந்து மாத்திரைகளை பரிந்துரைப்பார்கள். ஆனால் அந்த மருந்துகளின் விளைவு, மருந்துக்கு உடல் எப்படி ஒத்துழைக்கிறது என்பதை பொறுத்தது என்கிறார் மருத்துவர் கோபராஜு சமரம்.

விந்தணுக்களை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?

கொரோனா வைரஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கொரோனா வைரஸ்

விந்தணு எண்ணிக்கையை மேம்படுத்த டாக்டர் சமரம் 9 விஷயங்களை பரிந்துரைக்கிறார்.

  • தவறாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டும்
  • 8 மணிநேரம் நன்றாக தூங்குங்கள்.
  • புகைபிடிப்பதை தவிர்க்கவும்.
  • மதுவை அதிகமாக உட்கொள்ள வேண்டாம்.
  • மருத்துவரின் ஆலோசனையின்றி எந்தவித மருந்துகளையும் உட்கொள்ளக் கூடாது.
  • ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ள உணவை எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • ஆரோக்கியமற்ற கொழுப்புகள் அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்கவும்.
  • பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் சாப்பிட வேண்டும்.
  • மன அழுத்தத்தை முடிந்தவரை குறைக்கவும்.

விந்தணுக்கள் Vs செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை

விந்தணு - மாதிரிப் படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, விந்தணு – மாதிரிப் படம்

கோவிட் தொற்றால் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டு வருவதாக பரவும் செய்திகளால், பல ஐவிஎஃப் கிளினிக்குகள் தங்களுடைய வணிகத்த வளர்க்க, மக்களை அச்சுறுத்துகிறார்கள் என்கிறார் மருத்துவர் ராமராஜு.

இன்னும் சில கிளிக்குகளில், கொரோனாவில் இருந்து மீண்ட பிறகு தங்களை தேடி வர்ற தம்பதிகளிளிடம் தேவை இல்லைனாலும் செயற்கை கருத்தரிப்பை முயற்சிக்க வேண்டும் என்று அறிவுறுத்துவதாவும், அவர்களிடம் கொரோனாவால் விந்தணுக்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டது என்று அச்சுறுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டுகிறார்.

அப்படிப்பட்ட சிகிச்சை மையங்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம் என்கிறார் மருத்துவர் ராமராஜூ. குறைந்தது 12 மாதங்களுக்கு இயற்கையான முறையில கருத்தரிக்க முயற்சித்த பின்னரே IVF போன்ற முறைகளுக்குச் செல்ல வேண்டும் என்கிறார் அவர்.

மற்றொரு பக்கம் மருத்துவர் சமரம், கொரோனா நோய் தொற்றில் இருந்து மீண்ட பிறகு ஏற்படக்கூடிய எந்தவொரு பிரச்னையையும் சமாளிக்க சிறந்த வழி, ஆரோக்கியத்தை மேம்படுத்துதான் என்கிறார்.

அதனுடன், உங்கள் விந்தணு எண்ணிக்கை குறைவாக இருக்குறதா நீங்களே நினைத்து கொண்டு IVF சிகிச்சை மையத்தை சுற்றி வர வேண்டிய அவசியமில்லை எனவும் சில வகையான உடல்நலப் பிரச்னைகள நாம் எதுவும் செய்ய முடியாது, அந்த பிரச்னைகளுக்கு உடல் தானாகவே நிலைமைய சரி செய்து கொள்ள வேண்டும் என்கிறார் மருத்துவர் கோபராஜு சமரம்.