புதினங்களின் சங்கமம்

யாழ்ப்பாணத்தில் இடுப்பளவு தண்ணீருக்குள் நிர்வாணமான பாடசாலை செல்லும் மாணவர்கள்!! பரபரப்புக் காட்சிகள்!!(Photos)

அம்மணமாய் பாடசாலைக்கு செல்லும் அவல நிலையை எடுத்துச் சொல்லுங்கள்.
வடமாகாண ஆளுனரே!
அரசாங்க அதிபரே!
மனித உரிமை ஆர்வலர்களே!
தொண்டு நிறுவனங்களே!
இது உங்களின் கவனத்திற்கு!
பாடசாலைக்குச் செல்லும் மாணவர்கள் #இடுப்பளவு #வெள்ளநீரில் #உடைகள் #ஏதுமின்றி #நடந்து #வந்து #கரையை சேர்ந்து, A9 வீதியோரத்தில் நின்று பாடசாலைக்கு தயாராகிச் செல்கின்றனர்.
தென்மராட்சி பிரதேச செயலகத்திற்குட்பட்ட கொடிகாமம் J/327 கிராமசேவையாளர் பிரிவு கிராமம் தொடரும் மழை வெள்ளத்தால் மூழ்கியுள்ளது.
பல வருடங்களாக நாம் யாரை எல்லாமே கேட்டு விட்டோம் இன்னும் ஒன்றுமில்லை. கிராம மீள் எழுச்சி என்கிறார்கள், நகர அழகுபடுத்தல் என்கிறார்கள் ஆனால் நாங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப முடியவில்லை.
எந்த அரசியல்வாதிகளும் , அரச அதிகாரிகளும் பார்கிறார்கள் இல்லை.
என ஆதங்கப்படும் கிராம மக்கள்.
தமக்கு அரிசி, மா,சீனி, அங்கர் கேட்கவில்லை.
தமக்கான வீதியினை செப்பனிட்டுத் தாருங்கள், சரியான நீர் வடிகாலமைப்பை செய்து தாருங்கள் எனத்தான் கோருகின்றனர். எமது பிள்ளைகளை படிக்க வைக்க நல்ல சூழலைத் தாருங்கள் எனத்தான் கோருகிறார்கள்.
#வடமாகாண ஆளுனரை நேரில் வந்து இந்த நிலையை ஒரு முறை பாருங்கள் எனக் கோருகிறார்கள். ஆளுனர் ஐயாவுடன் தொடர்பில் இருப்பவர்கள் இப் பிள்ளைகள் அம்மணமாய் பாடசாலைக்கு செல்லும் அவல நிலையை எடுத்துச் சொல்லுங்கள்.
மீள்பதிப்பு ஊடக நண்பர் மதி

May be an image of 4 people, child, people standing, outdoors and textMay be an image of 4 people, tree, nature and body of waterMay be an image of 3 people, people standing, tree and outdoorsMay be an image of 3 people, people standing, tree, body of water and text that says "Mathi suddy"May be an image of 1 person, child, sitting, standing and body of water