யாழ் வடமராட்சி கிழக்கில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு!
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மணற்காடு பிரதேசத்தில் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது.
இன்று காலை குறித்த சடலம் கரையொதுங்கியதாக பிரதேச மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
மணற்காடு அந்தோனியார் கோவில் பகுதியில் சடலம் கரையொதுங்கிய நிலையில் அதில் காயம் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலம் இந்திய இந்தியாவைச் சேர்ந்த மீனவருடையதா? என்ற கோணத்திலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
