புதினங்களின் சங்கமம்

கொரோனா அச்சம்!! 20 சதவிகிதமானவர்கள் புதைத்தல், புகையிலைப் பாவனையை கைவிட்டனர்!

கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாடுதழுவியதாக முன்னெடுக்கப்பட்டு வரும் சமூக முடக்கல் காலத்தில் புகைத்தல் மற்றும் புகையிலை பயன்படுத்துபவர்களில் 20 சதவிகிதமானவர்கள் அதிலிருந்து முற்றிலுமாக விலகியுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

அத்துடன் இலங்கையில் மதுபான மற்றும் புகையிலை பயன்பாடு வீழ்ச்சி கண்டுள்ளதாக இலங்கை மதுபான மற்றும் புகையிலைக் கட்டுப்பாட்டுத் தகவல் நிலையம் மேற்கொண்ட ஆய்வுகள் புலப்படுத்தியுள்ளன.

முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையில், இரண்டாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் மத்தியில் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் இத்தகவல் தெரியவந்துள்ளது.

இதன் பிரகாரம், மதுபான நுகர்ச்சி 80 சதவீதத்தாலும், புகைத்தல் மற்றும் புகையிலை பயன்பாடு 48 சதவீதத்தாலும் குறைந்திருக்கிறது. சமூக முடக்கநிலை காரணமாக இருபது சதவீதமானவர்கள் புகைத்தல் மற்றும் புகையிலை பயன்பாட்டில் இருந்து முற்றாக விலகியிருக்கிறார்கள் என்பது ஆய்வின்மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.