யாழில் பேஸ்புக் காதல்!! 44 வயது வெளிநாட்டு தமிழனை கலியாணம் கட்டிய 19 வயது யுவதி!! பெற்றோர் கடும் எதிர்ப்பு!! பின்னர் நடந்தது என்ன?
யாழ்ப்பாணத்தில் 19 வயதான யுவதியும், 44 வயதான பேஸ்புக் வெளிநாட்டு காதலனும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
கோப்பாய் பகுதியில் கடந்த வாரம் இந்த திருமணம், பெரும் களேபரங்களிற்கிடையில் நடந்து முடிந்தது.
தெரிய வருகிறது. கனடாவில் வதியும் சாவகச்சேரி பகுதியை சேர்ந்த ஒருவரை உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளார்.
அது தெய்வீக காதலென இருவரும் நம்பியதால், தமக்கிடையிலிருந்து வயது வித்தியாசததை அவர்கள் கணக்கில் கொள்ளவில்லை. காதலனிற்கு 44 வயது.
சில வாரங்களிற்கு முன்னர் காதலன் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
யுவதி தனது வீட்டில் காதல் விவகாரத்தை கூறினார். வீட்டில் கடுமையான எதிர்ப்பு தெரிவித்த போது, கடந்த வாரம் வீட்டிலிருந்து இரகசியமாக வெளியேறி, பேஸ்புக் காதலனின் உறவினர் வீடொன்றில் தங்கியிருந்தார்.
இருவரும் திருமணம் செய்வது உறுதியான பின்னர், யுவதியின் பெற்றோர் எதிர்ப்பை கைவிட்டு, திருமண நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.
கடந்த வாரம் தென்மராட்சியிலுள்ள கோயிலொன்றில் திருமணம் நடைபெற்றது.

