வடமராட்சி துன்னாலைப் பகுதி திடீர் சுற்றுவளைப்பு!! இருவர் கைது!!
துன்னாலை குடவத்தை பகுதியில் இராணுவம், பொலிசார், விஷேட அதிரடிப்படையினர் இணைந்து மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலீசார் தெரிவித்தனர்.
நீதிமன்றத்தினால் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டவர்களை கைது செய்வதற்காகவே இன்று இச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தேடுதல் அதிகாலை 5 மணியிலிருந்து காலை 6 மணி வரையான ஒரு மணித்தியாலம் இடம்பெற்றுள்ளது.
இதில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

