இலங்கையில் தொடர்ச்சியாக வெடிக்கும் காஸ் சிலிண்டர்கள்!! குமுதினியும் வெடிப்புக்கு இலக்காகிப் பலி!!
மன்னம்பிட்டி பகுதியிலுள்ள வீடொன்றில் ஏற்பட்ட கேஸ் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் எரி காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அயேஷா குமுதினி எனும் 19 வயது இளம் பெண் ஒருவர் நேற்று(25) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இலங்கையில் தற்போது கேஸ் தட்டுப்பாடு நிலவி வருகின்ற நிலமையில் ஆங்காங்கே கடந்த ஒரு சில தினங்களுக்குள் பல்வேறு பகுதிகளில் கேஸ் வெடிப்பு சம்பவங்களும் இடம்பெற்று வருவதாக தற்போது செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை மேற்குறித்த சம்பவங்கள் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், விஞ்ஞான ரீதியிலான ஆய்வுகளும் மேற்கொள்ளப்படுவதாக மேலும் தெரிய வருகிறது.
எனினும் புதிதாக வீட்டுக்கு கொண்டு வருகின்ற கேஸ் சிலிண்டர்கள் தொடர்பில் அவற்றை மிகுந்த அவதானமாக கையாளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளபட்டுள்ளனர்.

