பிரபாகரன் போதைப் பொருள் வியாபாரியாம்!! டக்ளஸ் கூறுவது என்ன??
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒரு போதைப்பொருள் வர்த்தகர் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று (23) நடைபெற்ற ஜனாதிபதி, பிரதமருக்கான செலவினத் தலைப்புக்கள் மீதான விவாதத்தில் உரையாற்றிய கூட்டமைப்பு எம்.பி ஸ்ரீதரனின் உரைக்கு குறுக்கீடு செய்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் வடக்கில் போதைப்பொருளின் பாவனை அதிகரித்துள்ளதாக ஸ்ரீதரன் எம்.பி உரையாற்றிக்கொண்டிருந்தபோது, குறுக்கீடு செய்த அமைச்சர் டக்ளஸ், விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒரு போதைப்பொருள் வர்த்தகர். அவர் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டார். இது ஸ்ரீதரனுக்கு தெரியுமோ தெரியாது.
ஸ்ரீதரன் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த போது சில விடயங்களை வடக்குக்கு செய்ததாக ஏற்றுக்கொள்கின்றார். அதற்கு முன்னர் ஏன் செய்யப்படவில்லை என்று கேட்கிறார். அதற்கு முன்னர் செய்ய அங்குள்ளவர்கள் விடவில்லை தடைகளை ஏற்படுத்தினார்கள் எனவும் தெரிவித்தார்.