சாவகச்சேரியில் வாள்வெட்டு வன்முறை! ஒருவர் படுகாயம்!
யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட சாவகச்சேரி நகர் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
படுகாயம் அடைந்தவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் 36 வயதுடைய ஒருவரே காயம் அடைந்துள்ளார்.
தனிப்பட்ட பகையே வாள்வெட்டுக்கான காரணம் என்று முதற் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

