புலம்பெயர் தமிழர்

உலக கிண்ண தற்காப்புகலை போட்டி! முதலிடம் வென்ற சுவிஸ் வாழ் திருகோணமலை தமிழச்சி!(Video)

WUMF அமைப்பினால் கடந்த மாதம் நடாத்தப்பட்ட இணையவழி உலகக் கிண்ண கோபுடோ (ஜப்பானிய ஒக்கினவா பாரம்பரிய ஆயுத தற்காப்புகலை ) காட்டா சுற்றுப் போட்டிகளில் பெண்கள் சிரேஷ்ட பிரிவில் புலம்பெயர் தமிழ் மாணவி சென்செய் ஸப்தேஷ்ணா கெளரிதாசன் (காயா) Gaya Dhasan முதலாவது இடத்தினைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

இலங்கையின் திருகோணமலையை பிறப்பிடமாக கொண்டு சுவிட்சர்லாந்தில் வசிக்கும் சென்செய் ஸப்தேஷ்ணா கெளரிதாசன் புலம்பெயர் சுவிஸ் வாழ் தமிழாராவர்.

குறித்த போட்டியில் 2ம், 3ம் இடங்களினை இந்தோனேசியாவை சேர்ந்த Vania A. Sani Shinseidaikan மற்றும் Yayuk Die Shinseidaikan ஆகியோர் பெற்றுக் கொண்டுள்ளார்கள்.

இந்நிலையில் முதலிடத்தை பிடித்த மாணவி சென்செய் ஸப்தேஷ்ணா கெளரிதாசனுக்கு பலரும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.