நல்லுார் கோவில் முன் வெடியோசை!!! பாதைகள் தடைப்பட்டன!!
நல்லுார் கோவில் பகுதியில் பருத்தித்துறை யாழ் வீதிப் போக்குவரத்து முற்றாக துண்டிக்கப்பட்டு மாற்றுப் பாதையூடாக நடைபெறுகின்றது. வெடி குண்டு மிரட்டலையடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதே வேளை இன்று 11 மணியளவில் நல்லுார் சுற்றாடல் பகுதியில் கேட்ட வெடியோசை போன்ற சத்தத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. இச் சத்தம் வாகனத்தின் ரயர் வெடித்ததாலேயே ஏற்பட்டதாக தெரியவருகின்றது.