புதினங்களின் சங்கமம்

கொழும்பில் துப்பாக்கிச்சூட்டு!! இருவர் பலி!! பதற்றம் நீடிக்கின்றது!!

இலங்கையின் மேற்கே கொழும்பு பிலியந்தல, மொரட்டுமுல்ல பகுதியில் சற்றுமுன்னர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.

இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இரண்டு நபர்கள் பலியானதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார் என்று பொலிஸ் தரப்பு கூறுகின்றது.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் இந்த துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக அறியமுடிகிறது. இதன்போது அவ்விடத்தில் நின்ற மக்கள் அலறியடித்து ஓடியுள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூடு தனிப்பட்ட விரோதம் காரணமாக குடும்பம் ஒன்றின்மீது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறுகின்றார்.

இதில் தந்தையும், மகனின் நண்பரும் பலியானதுடன் மகன் படுகாயமடைந்து மொரட்டுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை இந்த துப்பாக்கிப் பிரயோகம் உயிரிழந்தவர்களின் வீட்டுக்கு அருகில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் கூறுகின்றனர்.