புதினங்களின் சங்கமம்

வடக்கின் மூன்று மாவட்டங்களின் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை!

வடக்கில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மூன்று மாவட்டங்களின் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோவன் வெளியிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் ஆகிய மாவட்டங்களின் பாடசாலைகளுக்கே நாளை (10) விடுமுறை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வடக்கின் உயர் மட்ட அதிகாரிகளுக்கு இடையிலான கலந்துரையாடலின் தொடராக குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக யாழ்.மாவட்ட அரச அதிபர் க.மகேசன் தெரிவித்தார்.