புதினங்களின் சங்கமம்

அம்பலாந்தோட்டையில் பயங்கரம்!! வீட்டுக்குள் வைத்து 3 பேர் வெட்டிப் படுகொலை!!

வீடு ஒன்றுக்குள் வைத்து மூவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்தக் கொடூர சம்பவம் அம்பலாந்தோட்டை, மாமடல பகுதியில் இடம்பெற்றுள்ளது.

6 பேர் கொண்ட குழு வீடு ஒன்றுக்குள் நுழைந்து அங்கிருந்த மூன்று பேரை வெட்டிப் படுகொலை செய்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணியளவில் இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர்கள் 29, 34 மற்றும் 45 வயதுடையவர்களாவர்.

ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள நிலையில், ஏனைய இருவரும் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சட்டவிரோத மதுபான வியாபாரத்தில் ஈடுபட்ட இரு தரப்பினரிடையே நீண்டகாலமாக நிலவி வந்த தகராறின் விளைவாக மேற்படி கொலை நடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக அம்பலாந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.