புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

தமிழின் மேல் காதல்!! அமெரிக்க பெண்ணின் கலியாணம் நடந்தது எப்படி? (Photos)

சமூகவலைதளத்தில் தங்கிலீஷ் பேசியே தமிழர்களிடம் பிரபலமான அமெரிக்க பெண் சமந்தா கண்ணன் என்ற தமிழரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

அமெரிக்காவின் இல்லினாய்ஸ் பகுதியை சேர்ந்தவர் சமந்தா ஜோஸ். அமெரிக்காவிலே பிறந்து வளர்ந்திருந்தாலும் கூட, தமிழ் மொழியின் மீது அவருக்கு ஒரு தனி பிரியம் ஏற்பட்டுள்ளது.

அதன் விளைவாக யுடியூப் வாயிலாக தமிழ் மொழியை கற்க ஆரம்பித்துள்ளார்.

இதையடுத்து டுவிட்டரில் தங்கிலீஷில் தமிழ் மக்களிடம் பேசி தனது தமிழ் திறமையை வளர்த்து வந்தார்.

இந்நிலையில் சமந்தா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், கண்ணன் என்ற தமிழ் இளைஞரை விரைவில் மணமுடிக்க உள்ளதாக சில மாதங்களுக்கு முன்னர் தெரிவித்தார்.

இதையடுத்து கண்ணனை சமந்தா நேற்று திருமணம் செய்து கொண்டார்.

இது தொடர்பான புகைப்படத்தை டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.

திருமணம் செய்து கொண்ட சமந்தாவுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில் அவர்களுக்கு மிக்க நன்றி என தங்கிலீஷில் அவர் பதில் அளித்து வருகிறார்.