புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

லண்டனில் அபூர்வமான இடத்துக்கு சென்ற ஈழதமிழனுக்கு நேர்ந்த கதி! (Photos)

“Isle of Skye” ஒரு அழகிய குட்டித்தீவு. Scotland இன் சில தீவுகளில் இதுவும் ஒன்று! இயற்கையை தேடிடும் என் பயணத்தில் அடுத்த இலக்கு இந்த தீவாக இருந்தது.

லண்டனில் இருந்து கிட்டத்தட்ட 15 மணிநேர கார் பயணம். தங்குவதற்காக எந்த ஆடம்பரமும் இல்லாமல் அழகிய நதிக்கரையில் கூடாரம் அமைத்து இரண்டு இரவுகள் அங்கேயே தங்கி அழகிய குட்டித்தீவை சுற்றிப்பார்க்க திட்டமிட்டோம்.

அழகிய மனிதர்கள் லண்டன் போன்ற பெருநகர கராலான மனிதர்களைப்போல் அல்லாமல் மிகவும் மென்மையான, உதவும் மனப்பான்மை கொண்ட மனிதர்கள். திரும்பிய திசையெல்லாம் இயற்கையழகும், அழகிய பழங்காலத்து வீடுகளும்தான்.

மலைப்பாங்கான மிக குறைந்தளவு மக்கள் தொகை கொண்ட இந்த குட்டித்தீவில் வாழும் மக்களின் பிரதான தொழில் கடல் சார்ந்த பொருளாதாரமும், ஆடு வளர்ப்பும் , whiskey உற்பத்தியும்தான்.

இரெண்டாம் நாள் ஆழ்கடல் மீன்பிடிக்க திட்டமிட்டோம். படகோட்டியாக ஏலியன் வந்தான். அவன் முன்னாள் பிரித்தானிய கடற்படை வீரன்.

தற்போது பிரித்தானிய காவல்துறையில் வேலை செய்து கொண்டு பகுதிநேர பொழுது போக்காக படகோட்டியாகவும், ஆழ்கடல் சுழியோடி காணொளிகளை YouTube மூலமாக கடல்சார்ந்த காணொளிகளை வெளியிட்டு வருகிறான்.

கடல் மீன் பண்ணைகள், கடற்சிங்கம், டொல்பின் போன்ற உயிரினங்களை மிக அருகில் சென்று பார்த்தோம் அதோடு நிறைய மீன்களும் தூண்டிலில் பிடித்தோம்.

பச்சை பாசி படர்ந்த கரு நிற பாறைகளில் சில நீர்வீழ்ச்சிகளும் அதன் மேல் பல செம்மரி ஆடுகளும் மேய்ந்து கொண்டிருந்தன.

அப்போது ஏலியன் சொன்னான் அங்கே ஆறடிக்கும் மேலான பெரிய இரெண்டு கழுகுகள் அங்கே வாழ்வதாகவும், பல நூறு வருட பழைய சுரங்கங்களும் கடலோடு சேர்ந்து இருப்பதாகவும் தான் பலதடவை அவற்றை பார்த்ததாகவும்.

இந்த குட்டித்தீவின் ஒரு பக்கத்தில் டைனோசர் வாழ்ந்ததற்கான படிவுகள் ஆராட்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டு அது மக்களின் பார்வைக்கும் விடப்பட்டுள்ளது.

அழகான அந்த இரண்டிரவும் பல நட்சத்திரங்களையும், கடல், நதி, மலை, நீர்வீழ்ச்சி போன்ற இயற்கையழகுடன் அழகிய வெள்ளந்தி மனிதர்களையும் எனக்கு காட்டிச்சென்றது.