மட்டக்களப்பில் கணவனால் கைவிடப்பட்ட தாய் கைக்குழந்தையுடன் வீதியோரத்தில்!! உதவுவோர் யாருமில்லையா?
மட்டக்களப்பு அரசடியில் திறந்த பல்கலைக் கழகத்தின் முன்னால் உள்ள மரத்தடியில் கணவனால் கைவிடப்பட்ட நோய்வாய்ப் பட்டுள்ள இளம் தாயொருவர் தனது பிஞ்சுக் குழந்தையுடன் யாசகம் கேட்டு அமர்ந்துள்ளார். இவரைக் காண்போர் பணத்தையோ அல்லது உணவுப் பொதிகளையோ வழங்கிச் செல்லலாம் ஆனால் அது இவருக்கு நிரந்தரமான தீர்வாக இருக்குமா????? அரசியல் வாதிகளே! அதிகாரிகளே! சமூக ஆர்வலர்களே! சமூக அமைப்புக்களே! புலம் பெயர் உறவுகளே !பொது நிறுவனங்களே! நன்கொடையாளர்களே! கருணை உள்ளம் கொண்டோரே! இந்தத் தாய்க்கு ஒரு நிரந்தர நிம்மதியைக் கொடுக்கும் உதவியைச் செய்ய முன்வந்தால் பெரிய புண்ணிய காரியமாகும்.
“தர்மம் தலைகாக்கும்”
இது ஒரு பேஸ்புக் பதிவாகும்…….




