திருகோணமலை மாணவி சாமினி பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை! (Photos)
திருகோணமலை ஆலங்கேணியைச் சேர்ந்த சாமினி (வயது17) என்ற மாணவி எரியூட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். சந்தேகத்தின்பேரில் அக்கிராமத்தைச் சேர்ந்த உறவு முறையான இரு இளைஞர்கள் கிண்ணியா பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இக்கொலைச் சம்பவம் 10.04.2021 அன்று அதிகாலை 3.00 மணியில் இடம்பெற்றதாகவும் இதனை உறவு முறையான இரு இளைஞர்களும் சேர்ந்து மேற்கொண்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
எரியூட்டப்பட்ட மாணவி கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 25.04.2021 அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
குறித்த மாணவி பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் மூன்றுமாத கற்பிணியாக இருந்ததாகவும் மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
குறித்த மாணவியின் கொலையுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் அக்கிராமத்தைச் சேர்ந்த உறவினரான இரு இளைஞர்கள் (பெயர்கள் தவிர்க்கப்பட்டுள்ளன) கிண்ணியா பொலிசாரினால் கைது செய்யப்பட்டு திருகோணமலை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் கொலையை தாமே செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
ஆலங்கேணி மகா வித்தியாலத்தில் கல்வி கற்ற இம் மாணவி சாதாரண தரத்தில் சிறந்த பெறுபேற்றைப் பெற்று உயர்தரத்தில் வர்த்தகப் பிரிவில் கல்வி கற்று வந்தார். இவர் பல்கலைக் கழகத்திற்கு தெரிவாகக்கூடியவராகவும் விளங்கினார்.
இவர் குறித்த இளைஞர்களால் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டு திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இவருடைய கொலைக்கான நீதி கிடைப்பதன் மூலம் இன்னும் பல மாணவிகள், பெண்கள் பாதுகாக்கப்படுவார்கள்.
இதற்காக நீதியை எதிர்பார்க்கும் அனைவரும் இதனை பகிர்ந்தாவது தங்களால் இயன்ற பங்களிப்பை வழங்க வேண்டியது அவசியம்
மேலதிக தொடர்புகளுக்கு
கேதீஸ்வரன் (தந்தை)
0759836210…

