யாழ்ப்பாணத்தில் உள்ள வீடு ஒன்றின் மீது வன்முறை கும்பல் பெட்ரோல் குண்டு தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் யாழ்.அரியாலை பகுதியில் ஏ-9 வீதியில் நேற்றிரவு (09) சனிக்கிழமை இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை குறித்த வீட்டின் மீது வன்முறை கும்பல் பெட்ரோல் குண்டு தாக்குதல் நடத்தியதில் முன் பகுதி தீப்பற்றி சேதமடைந்துள்ளது.
மேலும் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையை யாழ்ப்பாணம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.







