புதினங்களின் சங்கமம்

முதலாம் திகதி அதிகாலை 04 மணி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டது!

நாட்டில் நடைமுறையில் உள்ள ஊரடங்குச் சட்டம் மேலும் நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் முதலாம் திகதி அதிகாலை 04 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க தமது ட்விட்டர் தளத்தில் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாப ராஜபக்ஷ தலைமையில் இன்று கூடிய கொவிட்-19 தடுப்பு தேசிய செயலணி கூட்டத்தில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முன்னதாக எதிர்வரும் 21 ஆம் திகதிவரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை மேலும் நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.