யாழ் அஞ்சலகத்தில் பணியாற்றிய அபி கொரோனாவால் மரணமானது தொடர்பாக சதீஸ்வரனின் பேஸ்புக் பதிவு இது!! (Photos)

யாழ்.பிரதான அஞ்சல் அலுவலகத்தில் சகோதரி ‘அபி’ பணியாற்றிய நாட்களில் பெரும்பாலும் மோட்டார் சைக்கிளில் தான் வந்து போவார். சிறிய விபத்து காரணமாக கால் ஒன்று இயலாமல் போகவே பஸ்ஸில் வந்து போவார். ஒருநாள் நான் எனது வேலை முடிந்து பஸ்ஸுக்காக நடந்து சென்ற போது, சகோதரியும் வேலை முடிந்து பஸ்ஸுக்கு வந்து கொண்டிருந்தார். தானாகவே என்னைப் பார்த்து ‘நீங்கள் தெல்லிப்பளையா..? ‘ என்று கேட்டார். நானும் ‘ஆம்’ என்றேன். ‘நானும் தெல்லிப்பளை தான்’ என்றவர், இருவரும் ஒரே ஊர் என்கிற காரணத்தாலோ என்னவோ என்னைப்பற்றிய மேலதிக ஒரு சில விடயங்களை கேட்டுத் தெரிந்து கொண்டார். அன்றிலிருந்து என்னை காணும் போதெல்லாம் தலையாட்டி விட்டு செல்வார். இன்று காலை முகப்புத்தகத்தை திறந்த போது சகோதரி தொடர்பான செய்தியை அறிய முடிந்தது. கொடிய கொறோனா இன்னும் இன்னும் யார் யாரை எல்லாம் காவு கொள்ளப் போகிறதோ…? என்கிற பயத்தோடு….!சகோதரியின் இழப்பை தாங்க முடியாமல்…..! இன்றைய நாள் கறுப்பாகவே விடிந்திருக்கிறது.
ஆழ்ந்த இரங்கல்கள்.

அண்ணாமலை சதீஸ்வரன்

May be an image of 1 person, standing, outdoors and text that says "හෙක්ටර් කොබ්බෑකබුව ගොවි කටයුතු පර්සේෂණා හා පුහුණු කිරීමේ ආයතනය வெறக்டர் கொப்பேகடுவ கமநல ஆராய்ச்சி பயிற்சி வகம் HECTOR KOBBEKADUWA AGRARIAN RESEARCH AND TRAINING TITUTE" May be an image of 2 people, people sitting and indoor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)