யாழில் குழந்தையுடன் பிச்சை எடுத்து திரிந்த பெண்ணுக்கு பொலிசார் எடுத்த நடவடிக்கை இது!!

யாழ்.நகரில் குழந்தையுடன் யாசகம் பெற்றுவந்த பெண் பொலிஸாரினால் எச்சரிக்கப்பட்டு சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பபட்டுள்ளார்!
யாழ்.நகர் பகுதியிலும், நகரை அண்டிய பகுதிகளிலும் யாசகம் பெற்றுவந்த பெண் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு எச்சரிக்கப்பட்டதுடன் சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பிவைக்கப்பட்டிருக்கின்றார்.

குழந்தையுடன் பெண் ஒருவர் யாசகம் பெறுவதுடன் சிலவேளைகளில் ஆண் ஒருவருடன் இணைந்து 3 பேராக யாசகம் பெற்றுவந்திருக்கின்றனர். குறிப்பாக வீதியால் செல்வோரிடம் தாம் வெளியூரிலிருந்து வருவதாகவும்,

ஊரடங்கினால் வீடு செல்ல முடியவில்லை. எனவும் கூறிவந்த நிலையில் இந்த விடயம் தொடர்பாக யாழ்.பிரதேச செயலரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை தொடர்ந்து பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவல் அடிப்படையில்

இன்றைய தினம் தட்டாதெரு சந்தியை அண்மித்த பகுதியில் குழந்தையுடன் நின்ற பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் என தொியவந்துள்ளது.

மேலும் குடும்பமாக வந்து மணியந்தோட்டம் பகுதியில் தங்கியிருந்து முச்சக்கர வண்டியில் யாழ்.நகருக்கு வந்து யாசகம் பெறுவதாக கூறியுள்ளார். இதனையடுத்து அவரை கடுமையாக எச்சரித்துள்ள பொலிஸார் சொந்த ஊருக்கு செல்லுமாறு அறிவுறுத்தியதுடன்,

மீண்டும் யாசகம் பெறுவது கண்டுபிடிக்கப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். என எச்சரித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)