புதினங்களின் சங்கமம்

யாழில் முன்னாள் காதலியின் அம்மாவுக்கு இளைஞன் மீது விருப்பம்! இளைஞன் மீது வெறி தாக்குதல்!! !!

அராலி பகுதியில் 3ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய இளைஞனை மறித்து கும்பல் ஒன்று வாளை காட்டி மிரட்டியதுடன் கம்பிகளால் தாக்குதலும் நடாத்தியுள்ளது.

குறித்த இளைஞன் படுகாயம் அடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,

சாவகச்சேரியை சேர்ந்த குறித்த இளைஞனும் அவரது நண்பர்களும் ஹையேஸ் வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தவேளை, இடையே மறைத்து வாளுடன் வந்த கும்பல் ஒன்று குறித்த இளைஞனை வெளியே இழுத்து மூர்க்கத்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்நிலையில் காயமடைந்த இளைஞன் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பெறுகின்றார்.

குறித்த இளைஞன் அராலியை சேர்ந்த யுவதி ஒருவரை காதலித்து வந்தார். இந்தக் காதலுக்கு யுவதியின் தாயாரும் ஆரம்பத்தில் பச்சைக்கொடி காட்டியுள்ளார். அந்த யுவதி கடந்த நான்காம் மாதம் முதல் இளைஞனுடனான தொடர்பை துண்டித்துள்ளார்.

இந்நிலையில் நேற்றையதினம் அராலி பகுதிக்கு குறித்த இளைஞன் வந்தவேளை, யுவதியின் தந்தை, தந்தையின் சகோதரர்கள், யுவதியின் சகோதரர் மற்றும் உறவினர்களால் இந்த தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.