பொலனறுவையில் பஸ் ஆற்றில் பாய்ந்த காட்சிள் இதோ !! இதுவரை 9 பேர் பலி!! மேலும் பெருமளவானோர் இறந்திருக்கலாம் என அச்சம்!!
பொலன்னறுவை – கதுருவெல பகுதியிலிருந்து காத்தான்குடிக்கு சென்ற தனியார் பேருந்தொன்று விபத்திற்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த பேருந்தில் சுமார் 70 பேர் வரை பயணித்துள்ள நிலையில், பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகிலிருந்து பாலத்தில் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட பலர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், பலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் தெரியவருகின்றது.
விபத்து காரணமாக அப்பகுதியில் சற்று பதற்றமான சூழல் நிலவிவருவதுடன், மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 9 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் 30ற்கும் மேற்பட்டவர்கள் இறந்திருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

