இலங்கையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீடிக்கப்படுமா? நாளை முடிவு!
இலங்கையில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் 6 ஆம் திகதி திங்கட்கிழமைக்குப் பின்னரும் நீடிக்கப்படுமா? இல்லையா? என்பது குறித்து நாளை வெள்ளிக்கிழமை தீர்மானிக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கடந்த மாதம் 20 ஆம் திகதி முதல் தனிமைப்படுத்தல் ஊடரங்குச் சட்டம் அமுல் செய்யப்பட்டுள்ளது. 30 ஆம் திகதி வரை அறிவிக்கப்பட்ட இந்த ஊரடங்கு பின்னர் செப்டம்பர் 6 ஆம் திகதி திங்கட்கிழமை வரை நீடிக்கப்பட்டது.
இந்நிலையில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை மேலும் இரு வாரங்களுக்கு நீடிக்க வேண்டும் என கொவிட் கட்டுப்பாட்டு விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் டாக்டர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே நேற்று வலியுறுத்தினார்.
அத்துடன், சுகாதார வல்லுநர்களும் தனிமைப்படுத்தல் ஊடரங்களை நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையிலேயே தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் 6 ஆம் திகதி திங்கட்கிழமைக்குப் பின்னரும் நீடிக்கப்படுமா? இல்லையா? என்பது குறித்து நாளை வெள்ளிக்கிழமை தீர்மானிக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

