புதினங்களின் சங்கமம்

இராணுவச் சீருடையுடன் ஆயுதங்களுடன் வந்தவர்கள் யாழ் பொன்னாலை மேற்கு மக்களின் வீடுகளுக்குள் புகுந்து தாக்குதல்!! (Photos)

இராணுவச் சீருடையில், இராணுவ வாகனத்தில் வந்த 10 இற்கு மேற்பட்டவர்கள் பொன்னாலை மேற்கு மக்களின் வீடுகளுக்குள் புகுந்து கடும் தாக்குதல் நடத்தியுள்ளனர். தற்போது 11.50 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றது.
நான் சம்பவ இடத்திற்கு சென்றபோது கிராமமே மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடியிருந்தது. படைச் சீருடை அணிந்திருந்தவர்கள் மக்களின் வீடுகளுக்குள் நின்றனர். அவர்கள் ஆயுதங்களை வைத்திருந்தனர்.
அவர்களிடம் என்னை அறிமுகப்படுத்திய நான் மக்களைத் தாக்கியமை தொடர்பில் கேள்வியெழுப்பினேன். நான் இராணுவச் சீருடை அணிந்தவர்கள் என்னுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
நான் பொலிஸாருக்கு அழைப்பு எடுத்து அவர்களை உடனடியாக சம்பவ இடத்திற்கு வருமாறு அழைத்தேன். இதையடுத்து படைச் சீருடை அணிந்தவர்கள் ஓடித்தப்பியுள்ளனர்.
12 மணிக்கு வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு அறிவித்த போதிலும் இதுவரை பொலிஸார் வருகைதரவில்லை.

இதே வேளை இன்று பிற்பகல் பொன்னாலை மாட்டுவண்டித் திடலில் கொவிட் தொற்றையும் பொருட்படுத்தாமல் அராலியில் இருந்து வந்தவர்களால் மாட்டுவண்டிச் சவாரிப் போட்டி நடத்தப்பட்டது.இதன்போது. இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து கைகலப்பு ஏற்பட்டது. இதில் 10 இற்கு மேற்பட்டோர் காயமடைந்தனர் எனக் கூறப்படுகினறது. இதன் தொடர்ச்சியாவே படையினரின் தாக்குதல் இடம்பெற்றதாக மக்கள் கூறுகின்றனர்.

பிருந்தாபன் பொன்ராசா Facebook

May be an image of motorcycle and roadNo photo description available.No photo description available.