புதினங்களின் சங்கமம்

வவுனியாவில் கிணற்றிலிருந்து இளம் பெண்ணின சடலம் மீட்பு!

வவுனியா – ஆச்சிபுரம் பகுதியில் கிணற்றில் இருந்து இளம் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணை இன்று காலை முதல் வீட்டில் காணாத நிலையில், உறவினர்கள் அவரை தேடியுள்ளனர்.

இந்த நிலையில் அருகில் உள்ள கிணற்றில் இருந்து அவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த மோகன் திலக்சனா (வயது 19) என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.