புதினங்களின் சங்கமம்

யாழ். வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளர் கோவிட் தொற்றால் உயிரிழப்பு!!

யாழ். வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளர் கோணலிங்கம் கருணானந்தராசா கோவிட் தொற்றால் இன்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

திடீரென அவர் சுகயீனமடைந்த நிலையில் கடந்த 9ஆம் திகதி சுகாதார பிரிவினால் அன்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.

இதன்போது அவருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இந்த நிலையிலேயே இன்றைய தினம் அவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு அறிவித்துள்ளது.