அரச ஊழியர்களை பணிக்கு அழைப்பது தொடர்பில் புதிய தீர்மானம்!
கொரோனா அச்சுறுத்தல் இன்னமும் தொடர்ந்துவரும் சூழலில் அரச சேவையிலுள்ள கர்ப்பவதிகள் வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்குவது தொடர்பான சுற்றுநிருபம் ஒன்று பொது நிர்வாக அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், அரச நிறுவனங்களின் பிரதானிகளினது தீர்மானத்துக்கமைய, வாரத்துக்கு ஒரு குழுவினர் என்ற அடிப்படையில் இரு குழுக்களாக பிரித்து ஊழியர்களைக் கடமைக்கு அழைப்பது தொடர்பான விடயமும் குறித்த சுற்றுநிருபத்தில் உள்ளடக்கப்படவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

