Home புதினங்களின் சங்கமம் சாவகச்சேரி வைத்தியசாலையில் முதலாவது கொரோனா மரணம்!!

சாவகச்சேரி வைத்தியசாலையில் முதலாவது கொரோனா மரணம்!!

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை கொரோனா விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
நுணாவில் தெற்கு சாவகச்சேரிப் பகுதியைச் சேர்ந்த 86 வயதான முதியவர் ஒருவரே கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொவிட்-19 தொற்றுக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வந்த சமயம் உயிரிழந்துள்ளார்.
இது சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் கொரோனா விடுதியில் இடம்பெற்ற முதல் உயிரிழப்புச் சம்பவம் என்பது குறிப்பிடத்தக்கது.