புதினங்களின் சங்கமம்

யாழில் பயங்கரம்!! வீதியால் சென்றவர்களை கட்டி வைத்து அடித்துப் பழகிய மர்மநபர்கள்!!

யாழில் வீதியால் சென்றவரை கட்டிவைத்து தாக்கிவிட்டு மர்ம நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
தாக்கப்பட்டவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த அதிர்ச்சி சம்பவம் இன்று (5) காலை 5.30 மணியவில் வட்டுக்கோட்டை டச்சு வீதியில் நடந்தது.

அதிகாலை வீதியால் சென்றவரை மூவர் வழிமறித்து, எங்கே செல்கிறார் என விசாரித்து விட்டு,
வீதியில் கட்டிவைத்து தாக்கியுள்ளனர்.

பின்னர் தாக்குதலாளிகள் தப்பிச் சென்று விட்டனர்.

காயமடைந்தவரை பிரதேச இளைஞர்கள் மீட்டு தெல்லிப்பளை தார வைத்தியசாலையில்
அனுமதித்துள்ளனர். அவர் தலையில் பலத்த காயமடைந்துள்ளார்.