புதினங்களின் சங்கமம்

யாழில் குப்பி விளக்கு தீப்பற்றி மூதாட்டி மரணம்..!

யாழில் குப்பி விளக்கின் மூலம் உடலில் தீப்பற்றி மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கிளாலி, எழுதுமட்டுவாள் பகுதியைச் சேர்ந்த 88 வயதுடைய மூதாட்டியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

கடந்த 16ஆம் திகதி குறித்த மூதாட்டி வெளியே செல்வதற்கு குப்பி விளக்கினை பயன்படுத்தியுள்ளார்.

இதன்போது திடீரென அவர் மீது தீப்பற்றியது.

இந்நிலையில் உடனடியாக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் (17) உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x