புதினங்களின் சங்கமம்

நெடுந்தீவில் காணாமல் போன மீனவரின்- சடலம் தமிழகத்தில் கரையொதுங்கியது..?(Photos)

நெடுந்தீவில் கடற்றொழிலுக்கு சென்ற நிலையில் கடந்த வாரம் காணாமல் போன மீனவரின் சடலம் தமிழகத்தின் கோடியாக்கரையில் கரையொதுங்கியுள்ளதாக தெரியவருகின்றது.
நெடுந்தீவு 8 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த சில்வஸ்டார் மரியதாஸ் என்ற மீனவரே கடந்த வாரம் கட்டுமரத்தில் கடற்றொழிலுக்குச் சென்ற நிலையில் காணாமல் போயிருந்தார்.
அவரை தொடர்ந்தும் தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் அவருடைய சடலம் கோடியாக்கரையில் கரையொதிங்கியுள்ளது.
குறித்த மீனவரின் சடலமாக இருக்கலாம் என தெரியவருகின்றது.